Tuesday 16 June 2020

லக்ஷ்மி வசமாக வேண்டுமா ?

லக்ஷ்மி வசமாக வேண்டுமா ?




எவ்வளவு காசு வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம்! ஆனால் சேமிப்பதில்தான் திறமையை அடங்கியிருக்கின்றது. வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான குறிப்பு தான் இது.

ஒரு கண் தேங்காய் 1, சிறிய இளநீர் பிஞ்சு(குட்டியா இருக்கும்), 
மூங்கில் குச்சி ஒன்று, 
சிறிய கருங்கல், 
சந்தனக்கட்டை சிறிய துண்டு, 
துளசி குச்சி ஒன்று, 

இவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஏதாவது கிடைக்கவில்லை என்றால், கட்டாயம் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு மரப்பெட்டியில் வையுங்கள்.

உங்கள் கைகளுக்கு வரும் ரூபாய் நோட்டை, ஒரு முறை, இந்த பொருட்களை எல்லாம் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ‘இந்த பணமானது வீண் விரயம் ஆகாமல், நல்ல காரியங்களுக்கு மட்டுமே செலவாக வேண்டும். மகாலட்சுமி, எங்களிடம் நிரந்தரமாக தங்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

மகாலட்சுமி உங்கள் வசமாகுவாள் என்பதில் சந்தேகமே இல்லை!

ஹரி ஓம் !!


பீஷ்மர் கூறிய கதை

லக்ஷ்மி ஏன் அசுரர்களை விட்டு விலகினாள் ?




லட்சுமி  அசுரரை விட்டு விலகக் 
காரணங்களை இந்திரனுக்குக் 
கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்
ஒருமுறை இந்திரன் லட்சுமியைச் 

சந்தித்தான்.முறைப்படி பூஜைகள் 
செய்து , பின் பணிவுடன் 'நீங்கள் 
எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்?' 
என வினவினான்.
லட்சுமி கூறுகிறாள்..
'

நான் வெற்றியை விரும்பும் 
வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன்.
எப்போதும் பிறர்க்குக் கொடுக்கும் 
இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன்.
முன்னர் உண்மையான தருமத்தை 
அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் 
சில காலம் தங்கியிருந்தேன்.
காலப்போக்கில் அவர்களது போக்கு 
விபரீதமாக இருந்த காரணத்தால் 
அவர்களை விட்டு நீங்கி உன்னிடம்
வந்தடைந்தேன் 

"
தேவி எக் குணத்தைக் கண்டு 

அசுரர்களிடமிருந்து விலகினீர்"

'
அறவோரிடத்தும்,துணிவு 

மிக்கோரிடத்தும்,மோட்ச மார்க்கத்தில் 
செல்லும் மேலோரிடத்தும் நான் 
எப்போதும் விரும்பியிருப்பேன்.
ஒரு காலத்தில் அசுரர்கள் தான 
தருமங்களில் சிறந்திருந்தனர்.
பெரியோர்களிடம் 
தொடர்புள்ளவர்களாகவும்,
அடக்கம் மிக்கவர்களாகவும் 
இருந்தனர்.

சத்தியம் தவறாதவர்களாகவும்,

முயற்சியுடையவர்களாகவும்,
சுற்றத்தைக் காப்பவராகவும் 
இருந்தனர்.அவர்களிடம் 
பொறாமை இல்லாதிருந்தது.
பிறர் பொருளைக் கவரும் 

எண்ணம் இல்லாதிருந்தனர்.
பிறர் துன்பம் கண்டு மனம் 
இரங்கி உதவும் எண்ணம் 
உடையவர்களாக இருந்தனர்
.நேர்மை,பக்தி,புலனடக்கம் 
இவற்றில் சிறந்திருந்தனர்.
வேலைக்காரரிடம் அன்பாக 
இருந்தனர்.அமைச்சர்களின் 
ஆலோசனையைக் கேட்டுத் 
தக்கவாறு செயல் பட்டனர்.
தகுதியறிந்து தானம் அளித்தனர்.
உண்ணாவிரதமும் தியானமும் 
மேற்கொண்ட தவச்சீலர்களாக 
விளங்கினர்.இரவில் அதிக நேரம் 
உறங்குவதில்லை.அதிகாலை 
எழுந்து விடுவர்.மங்களகரமான 
பொருளையே முதலில் காண்பார்கள்.
பகலில் ஒரு போதும் அவர்கள் 

உறங்குவதில்லை.
ஆதறவற்றவர்களையும் 
முதியோர்களையும் கவனமாகப் 
பார்த்துக் கொண்டனர்.
பயத்தால் நடுங்கியவர்களுக்கும்,
நோயால் துன்புற்றவர்களுக்கும் 
ஆறுதல் கூறி ஆதரவு அளித்து 
வந்தனர்.குரு பக்தி மிகுந்தவர்களாகத் 
திகழ்ந்தனர்.இது போன்ற நற்குணங்கள் 
அவர்களிடம் இருந்த வரை நான் 
அவர்களிடம் இருந்தேன்.
பிறகு படிப்படியாக அவர்களிடம் 

இந்த நற்குணங்கள் விலகக் 
கண்டேன்.தரும மார்க்கத்தனின்று 
அவர்கள் நழுவினர்.காம வயப்பட்டுத் 
திரிந்தனர்.தரும உபதேசம் செய்யும் 
சாதுக்களைக் கேலி செய்தனர்.
பெரியோர்களை அலட்சியம் 
செய்தனர்.பிள்ளைகள் தாய் 
தந்தையரை மதிப்பதில்லை.
அவர்களின் பேச்சை மீறினர்.
பகைவருக்கு அடிமையாகி 
வெட்கமின்றி அவர்களைப் 
புகழ்ந்து பேசலாயினர்.பொருள் 
மீது ஆசை அதிகமாயிற்று.
பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது.
கணவன் பேச்சை மனைவி 
கேட்பதில்லை.மனைவியைக் 
கணவன் பொருட்படுத்தவே இல்லை.
அதுமட்டு மின்றி அவர்களை 
அடித்துத் துன்புறுத்தினர்.
மாதா,பிதா,குருசான்றோர் 

ஆகிய மேலோர்கள் அசுரரின் 
நிந்தனைக்கு ஆளாயினர்.
தான தருமங்களைச் செய்யத் 
தவறினர்.பசித்தவர்க்கு ஒரு 
பிடி சோறு வழங்கவும் அவர்கள் 
தயாராக இல்லை.சிறுவர்களையும்
முதியோரையும் காப்பாற்றும் 
எண்ணம் இல்லாமல் போயிற்று.
பசுக்களைக் காப்பாற்றத் தவறினர்.
கன்றுகளுக்குத் தேவையான பால் 
இல்லாமல் எல்லாவற்றையும் 
அவர்களே கறந்து குடித்தனர்.
சோம்பல் மிக்கவராயினர்.
சூரியன் உதயமான பின்னரும் 
அவர்கள் கண் விழிப்பதில்லை.
இரவு,பகல் எப்போதும் ஒவ்வொரு 
வீட்டிலும் கலவரமே காணப்பட்டது.
தூய்மை என்பது எங்கும் இல்லை
இந்நிலையில் அந்த அசுரர்களை 
விட்டு நான் விலகி உன்னிடம் 
வந்து சேர்ந்தேன்'
லட்சுமியின் இப்பேச்சைக் கொண்டு 

அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் 
எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..
எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது 
என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர். 




புல்லிலிருந்தோ,கல்லிலிருந்தோ,
கட்டையிலிருந்தோ புலால் 
கிடைப்பதில்லை.ஒரு உயிரைக் 
கொன்றால் தான் கிடைக்கும்.ஆகவே 
அதை உண்பது பாவம் ஆகும்.புலால் 
உண்ணாதவனுக்கு அச்சம் இல்லை.
அவன் ஏற முடியாத மலை மீது 
அஞ்சாமல் ஏறுவான்.இரவிலும்,
பகலிலும் அவனுக்குப் பயம் இல்லை.
பிறர் ஆயிதத்தால் தாக்க வந்தாலும் 
அவன் அஞ்ச மாட்டான்.அவனைக் 
கொடிய விலங்குகளும் பாம்பும் ஒன்றும் 
செய்யாமல் விலகிச் செல்லும்.அவன் 
அஞ்ச வருவது எதுவும் இல்லை.
புலால் உண்ணாமல் இருப்பது 
செல்வத்தைத் தரும்.புகழைத் தரும்.
நீண்ட ஆயுளைத் தரும்.பின் 
சுவர்க்கத்தைத் தரும்.
புலால் உண்பவன்கொல்பவன் 
போலவே பாவம் செய்கிறான்.
விலைக்கு வாங்குபவன் பொருளால் 
கொல்கிறான்.சாப்பிடுபவன் உண்பதால் 
கொல்கிறான்.ஒரு விலங்கைக் 
கொண்டு வருபவன்,அதனை 
ஒப்புக் கொள்பவன்,கொல்பவன்,
விற்பவன்,வாங்குபவன்,சமைப்பவன்,
புசிப்பவன் இவர்கள் அனைவரும் 
கொலையாளிகள்தாம்.
இறுதியாகக் கொல்லாமையின் 
சிறப்பை உனக்கு உணர்த்துகிறேன்.
கொல்லாமையே உயர்ந்த தானம்.
கொல்லாமையே சிறந்த நண்பன்.
கொல்லாமையே யாகங்கள் 
அனைத்திலும் சிறந்தது.
கொல்லாமை மேற்கொள்பவன் 
உலக உயிர்களுக்குத் தாயாக 
விளங்குகிறான்.தந்தையாகப் 
போற்றப்படுகிறான்.ஆண்டுகள் 
பல நூறு ஆனாலும் 
கொல்லாமையின் பெருமையை 
முற்றிலும் உரைக்க முடியாது
என்று கூறி முடித்தார் பீஷ்மர்.


இது..பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது
பாண்டவர்களுக்குக் கூறியது.  மஹாபாரதத்தில்
சாந்தி பருவம் என்னும் பருவத்தில் உள்ளது .

ஹரி ஓம் !!